×

மழை வெள்ளத்தில் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர் குடும்பத்திற்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்

 

விருதுநகர், டிச.8: விருதுநகரில், பெஞ்சல் புயல் வெள்ளத்தில் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர் குடும்பத்திற்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஏஐடியுசி மாவட்டத் தலைவர் பெருமாள் ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் வெள்ளத்தில் சிக்கி டாஸ்மாக் கடை விற்பனையாளர் சக்திவேல் கடந்த 2ம் தேதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பணியாளர் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். பணிக்காலத்தில் இறந்த பணியாளர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் அரசுத்துறை வாரிசு வேலை வழங்க வேண்டும். பணிக்காலத்தில் மரணமடைந்த பணியாளரது குழந்தைகள் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

The post மழை வெள்ளத்தில் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர் குடும்பத்திற்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Bengal Storm ,AITUC District ,President ,Perumal Raj ,Tasmak All Unions Joint Action Group ,Virudhunagar Collector's Office ,Dinakaran ,
× RELATED கூட்டுறவு சங்கத்திற்கு அதிக பால்...