×

ஆஸி ஓபன் டென்னிஸ் இந்திய வீரர் சுமித் தகுதி

புதுடெல்லி: இந்தியாவின் சுமித் நாகல், வரும் 2025 ஜனவரியில் நடக்கவுள்ள ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாட நேரடியாக தகுதி பெற்றுள்ளார். ஆஸி கிராண்ட் ஸ்லாம் போட்டிகள், 2025ல் ஜன. 12ல் துவங்கி 26ம் தேதி வரை நடக்கவுள்ளன. இந்த தொடரில் மோத, நேரடியாக தகுதி பெற்றுள்ள வீரர்களின் பட்டியலை ஆஸி ஓபன் டென்னிஸ் கூட்டமைப்பு நேற்று வௌியிட்டது. இதில் இந்தியாவை சேர்ந்த சுமித் நாகல் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவர், ஆண்கள் ஒற்றையர் தர வரிசையில் 98வது இடத்தில் உள்ளார்.

ஆஸி ஓபன் டென்னிஸ் போட்டியில் சுமித் நாகல் பங்கேற்பது 5வது முறை. ஆஸி ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கு பெறும் வீரர்களின் ரேங்க் நிலை, அவர்கள் இதற்கு முன் கலந்து கொண்ட போட்டிகளில் பெற்ற வெற்றி தோல்விகள் அடிப்படையில் நேற்று வெளியானது. இதன்படி, தற்போதைய சாம்பியனான இத்தாலி வீரர் ஜேன்னிக் சின்னர் 1ம் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடங்களில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் உள்ளனர். செர்பியாவின் நோவக் ஜோகோவிக் 7ம் இடம் பெற்றுள்ளார். இதன் அடிப்படையில் யார் யாருடன் மோதுவர் என்பது தீர்மானிக்கப்படும்.

The post ஆஸி ஓபன் டென்னிஸ் இந்திய வீரர் சுமித் தகுதி appeared first on Dinakaran.

Tags : Sumit ,Aussie Open tennis ,NEW DELHI ,INDIA ,SUMIT NAGAL ,OPEN ,Aussie Grand Slam Tournaments ,Aussie Open ,Dinakaran ,
× RELATED குடிபாலா- எம்எஸ்ஆர் சர்க்கிள் வரை...