- திருவள்ளூர்
- சுகாதார சேவைகள் அலுவலகம்
- திருவள்ளூர்
- மாவட்ட சுகாதார சேவைகள்
- வடக்கு
- ராஜவீதீ
- துணை இயக்குநர்
- சுகாதார சேவைகள்
- மலேரியா
திருவள்ளூர்: திருவள்ளூர் வடக்கு ராஜவீதியில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தற்போது முதல் மாடி புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதால் 2வது தளத்தில் கூடுதலாக கணினிகள் வைத்து பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று சுகாதார ஆய்வாளர் விக்னேஷ், அலுவலக உதவியாளர் மிலின் ஆகியோர் இரவு பணியில் இருந்துள்ளனர். இன்று காலை 6.30 மணி அளவில் அந்த அலுவலகம் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்துவந்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் அலுவலகத்தில் இருந்த 8க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள், 3க்கும் மேற்பட்ட ஏசி, பிரிண்டர் என்று ரூ.10 லட்சத்துக்குமேற்பட்ட மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மலேரியா விவரங்கள் குறித்த ஆவணங்கள் முழுமையாக தீயில் கருகி உள்ளதால் மீண்டும் மலேரியா விவரங்களை சேகரிப்பது மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்திற்கு ஒரு சவாலாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
The post திருவள்ளூர் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஆபீசில் தீ: மலேரியா விவர ஆவணம் அழிந்தது appeared first on Dinakaran.