×

லுக் அவுட் நோட்டீஸ் நிபந்தனை விதிக்கலாம்: ஐகோர்ட்

சென்னை: குற்றம்சாட்டப்பட்டோர் வெளிநாடு செல்வதை தடுக்காமல், அவர்கள் நாடுதிரும்ப நிபந்தனை விதித்து நோட்டீசை நிறுத்திவைக்கலாம் என ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வங்கி மோசடி வழக்கில் பதான் அப்சர் உசேன், ஜீவானந்தம், ராஜேஷ் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். நீதிமுறை குற்றம்சாட்டப்பட்டோரின் தொடர்பை உறுதிசெய்ய வேண்டும், தனிப்பட்ட வாழ்கையை பாதிக்கக் கூடியதாக இருக்கக் கூடாது. வழக்கை எதிர்கொள்ளாமல் வெளிநாடு தப்பிவிடுவர் என்ற அச்சம் சிபிஐ போன்ற புலன் விசாரணை அமைப்புகளுக்கு வரக்கூடாது அவர்கள் நாடு திரும்பும் அளவில் விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை இருக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார். வெளிநாடு செல்லும் உரிமையை வழங்குவதுடன், அவர் நாடு திரும்புவதை உறுதிசெய்யும் வகையில் நிபந்தனைகளை விதிக்கலாம் என்றும் எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைக்கக் கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

The post லுக் அவுட் நோட்டீஸ் நிபந்தனை விதிக்கலாம்: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : iCourt ,CHENNAI ,Pathan Absar Hussain ,Jeevanandam ,Rajesh ,Dinakaran ,
× RELATED சார்-பதிவாளருக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு