×

ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில்,’ உயர் பணவீக்கம் மற்றும் ஜிடிபி சரிவுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாக வைத்துள்ளது. கடைசியாக 2023 பிப்ரவரியில் ரெப்போ விகிதங்களை 6.5% ஆக எம்பிசி உயர்த்தியது. இதனால் வீடு, வாகன கடன் வட்டியில் எந்தவித மாற்றமும் இருக்காது.

பதவி நீட்டிப்பா?
ரிசர்வ் வங்கியின் ஆளுநரான சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் டிச.10ல் முடிகிறது. 2018 டிசம்பர் 12ல் பதவி ஏற்ற அவருக்கு வயது தற்போது 67 ஆகிறது. ஏற்கனவே 2 முறை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்னும் 2 நாளில் 3வது முறை நீட்டிப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

The post ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Reserve Bank ,Mumbai ,Reserve Bank of India ,RBI ,Financial Policy Committee ,Governor Powerful Das ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையின்போது தங்கம்...