×

கடமலைக்குண்டு அருகே தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு

வருசநாடு, டிச. 7: கடமலைக்குண்டு அருகே தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே பாலூத்து மலைக்கிராமத்தில் செல்வம் என்பவருக்கு சொந்தமான எலுமிச்சை தோட்டம் உள்ளது. இங்கு நேற்று காலை 10க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் எலுமிச்சை பழங்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்குள்ள ஒரு மரத்தின் அடியில் மலைப்பாம்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில் கடமலைக்குண்டு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை கண்டமனூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத் துறையினர் மலைப்பாம்பை காட்டுப் பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர்.

The post கடமலைக்குண்டு அருகே தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு appeared first on Dinakaran.

Tags : Kadamalaikundu ,Varusanadu ,Selvam ,Baluthu hill village ,Theni district ,
× RELATED கடமலைக்குண்டு மூல வைகை ஆற்றில்...