- ஜி.கே.
- வாசன்
- விழுப்புரம்
- தமிழ் மாநில காங்கிரஸ்
- ஜனாதிபதி
- ஜி. வாசன்
- யூனியன் அரசு
- தமிழ்நாடு அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அய்யூர் அகரம் பகுதியில் புயல்பாதித்த பகுதி பொதுமக்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது: தமிழக மக்களை துயரத்திலிருந்து மீட்க ஒன்றிய அரசு, தமிழக அரசு இணைந்து செயல்பட வேண்டும். ஒன்றிய அரசு குழுவை அனுப்பிய பிறகு படிப்படியாக தமிழக அரசின் தேவைகளை பூர்த்தி செய்யும்.
ஒன்றிய அரசை பொறுத்தவரை மாநிலங்களின் வளர்ச்சியில் மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லாத அரசாக செயல்பட்டு கொண்டு வருகிறது. மற்ற மாநிலங்களைப்போல் தமிழகத்திற்கும் மத்திய அரசு எல்லா தேவைகளுக்கான நிதியையும் ஒதுக்கியிருக்கிறது என்பதில் மாற்று கருத்து கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post புயல் பாதித்த விழுப்புரத்தில் ஜி.கே.வாசன் நிவாரண உதவி appeared first on Dinakaran.