சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ப்ரோபா 3 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. இந்திய மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகளின் முயற்சியால் செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் விஞ்ஞானிகள் தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதும், வெற்றி பெறுவதும் பெருமைக்குரியது. இந்திய விஞ்ஞானிகளின் தொடர் முயற்சிக்கும், வெற்றிக்கும் உதவிக்கரமாக பணியாற்றியவர்களும் இதற்காக தொடர் முயற்சி செய்த இந்திய மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகளை பாராட்டி, வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post பிஎஸ்எல்வி திட்டம் வெற்றி விஞ்ஞானிகளுக்கு வாசன் பாராட்டு appeared first on Dinakaran.