×

திருத்தணி முருகன் கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்: கோரிக்கை மனு வைத்து வழிபாடு

திருத்தணி: திருத்தணி முருப்பெருமானுக்கு நடந்த அபிஷேகத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று சாமி பாதத்தில் கோரிக்கை சீட்டு வைத்து வழிபட்டார். திருத்தணி முருகன் கோயிலில் நேற்று மாலை முருகப்பெருமானுக்கு அபிஷேக பூஜைகள் நடந்தது. இதில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். சுமார் ஒருமணி நேரம் நடந்த அபிஷேகத்தில் பூஜையின்போது துண்டு சீட்டு அடங்கிய மனுவை முருகன் பாதத்தில் வைத்து சாமி தரிசனம் செய்து வழிபட்டார். இதையடுத்து, ருத்ராட்சை மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத உற்சவர், சண்முகர், ஆபத்சகாய விநாயகரை வணங்கினார்.

கோயில் சார்பில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மலர்மாலை அணிவித்து கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது. கோயில் எதிரில் திஷ்டி நீங்க உப்பு, மளகு திஷ்டி சுற்றிக் கொண்டார். இதனை அடுத்து கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் சிலர் ஆர்வத்துடன் ஓபிஎஸ்சுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். அதிமுகவில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில் சிவில் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் திருத்தணி முருகன் கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்து வழிபட்டது குறிப்பிடதக்கது.

The post திருத்தணி முருகன் கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்: கோரிக்கை மனு வைத்து வழிபாடு appeared first on Dinakaran.

Tags : O. Panneerselvam ,Sami ,Tiruthani Murugan Temple ,Thiruthani ,Lord ,Muruga ,Chief Minister ,O. Panneerselvam Sami ,
× RELATED நடிகர் ரஜினிக்கு, கமல்ஹாசன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து