×

திருநின்றவூர் ஜெயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருவள்ளூர்: சென்னை அடுத்த திருநின்றவூர், கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஜெயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சி தொடக்க விழாவிற்கு பள்ளியின் இயக்குனர் எஸ்.கருணாகரன், முதல்வர் கீதா ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயா கல்வி குழுமங்களின் தலைவர் பேராசிரியர் அ.கனகராஜ் தலைமை தாங்கி கண்காட்சியை திறந்து வைத்தார். திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பாரம்பரிய வரவேற்பு நடனம், பொம்மலாட்டம், தமிழ் நகைச்சுவை நாடகம், ஆங்கிலம் நாடகம் ஆகியவை நடைபெற்றது. மேலும் மாணவ, மாணவிகள் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்றவற்றில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த அறிவியல் கண்காட்சியில் திருநின்றவூரில் உள்ள ஜெயா குழுமத்தின் மற்ற பள்ளி மாணவ, மாணவிகளும், தாசர் பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

The post திருநின்றவூர் ஜெயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Science Fair ,Jaya Matriculation School ,Thiruninnavur ,Thiruvallur ,Krishnapuram, Thiruninnavur ,Chennai ,S. Karunakaran ,Principal ,Geetha Sridhar ,Jaya Education Group ,Jaya ,Matriculation ,School ,Dinakaran ,
× RELATED ஆத்தூர் சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி