×

செங்குன்றம் பேரூராட்சி சார்பில் ஏரியா சபை கூட்டம்

புழல்: சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு செங்குன்றம் நாரவாரி குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு பகுதியில் ஏரியா சபை கூட்டம் செங்குன்றம் நேரு தெருவில் உள்ள தனியார் மண்டபம் அருகில் நேற்று நடந்தது. இதில் திமுக வார்டு கவுன்சிலர் கார்த்திக் கோடீஸ்வரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக செங்குன்றம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ், செங்குன்றம் கிராம நிர்வாக அலுவலர் சிவராமன், பேரூராட்சி இளநிலை உதவியாளர் குமார், வரி தண்டலர் ஆகாஷ், செங்குன்றம் மின்சார வாரிய முதல்நிலை முகவர் பொன்னுசாமி ஆகியோர் கலந்துகொண்டு, பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை குறித்து கேட்டறிந்தனர். கூட்டத்தில் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் வழக்கறிஞர் சுதாகர், செங்குன்றம் காங்கிரஸ் முன்னாள் நகர தலைவர் லோகநாதன் மற்றும் வார்டுக்கு உட்பட்ட ஏராளமான பெண்கள், இளைஞர்கள் கலந்துகொண்டு பல்வேறு அடிப்படை பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post செங்குன்றம் பேரூராட்சி சார்பில் ஏரியா சபை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Senggunram ,PUJAL ,International Human Rights Day ,Sengunram Naravari Kuppam Municipal Corporation ,Nehru Street ,Sengunram ,DMK ,Senggunram municipality ,Dinakaran ,
× RELATED பாடியநல்லூர் சோதனை சாவடி அருகே...