- வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டம்
- துரை சந்திரசேகர்
- சட்டமன்ற உறுப்பினர்
- திருவள்ளூர்
- திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் குழு
- ஜனாதிபதி
- கிராம காங்கிரஸ் கமிட்டிகள்
- வடக்கு மாவட்டம்
- காங்கிரஸ்
- குழு
- தின மலர்
திருவள்ளூர்: திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, கிராம காங்கிரஸ் கமிட்டிகளை வலுப்படுத்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் திருவள்ளூர், டிஆர்எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. எனவே, கூட்டத்தில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் கலந்துக் கொண்டு ஆலோசனைகளை வழங்க உள்ளார். மேலும், மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏவால் நியமிக்கப்பட்ட மேலிடப் பார்வையாளர்களான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வி.ஆர்.சிவராமன், மாநில செயலாளர் விருகை பட்டாபி, சந்தன் பாபு, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் துஹினா சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர். எனவே, கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் கூறியுள்ளார்.
The post இன்று வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்: துரை சந்திரசேகர் எம்எல்ஏ தகவல் appeared first on Dinakaran.