×

தமிழகத்தில் மழை நீடிக்கும் வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்தம்: வானிலை மையம் தகவல்

சென்னை: அரபிக் கடல் பகுதிக்கு சென்ற பெஞ்சல் புயலின் ஒரு பகுதி பிரிந்து தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியாக உருவாகியுள்ளது. அத்துடன் கர்நாடக பகுதியிலும் ஒரு வளி மண்டல காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது. இந்த இரண்டு காற்று சுழற்சிகளின் காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும், கர்நாடக வளி மண்டல சுழற்சியும் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, சுமத்ரா தீவுக்கு அடுத்து கடலில் ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது. வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் அந்தமான் கடல் பகுதிக்கு வரும். அதன் பின்னர் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, 10ம் தேதிக்கு பிறகு தமிழக கடலோரப் பகுதிக்கு நெருங்கி வரும். அது மேலும் வலுவடையும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாக, தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கும்.

இதன் காரணமாக இன்று முதல் 10ம் தேதிவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 11ம் தேதியில் கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

The post தமிழகத்தில் மழை நீடிக்கும் வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்தம்: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Bay of Bengal ,CHENNAI ,Cyclone Benjal ,Arabian Sea ,South East Arabian Sea ,Karnataka ,Meteorological Department ,
× RELATED ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி...