- முதல் அமைச்சர்
- அமைச்சர்
- சென்னை
- கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை
- KKSSR ராமச்சந்திரன்
- பென்ஜால் புயல் எச்சரிக்கை
சென்னை: முதல்வரை மக்கள் பாராட்டுவதை பொறுக்க முடியாமல்தான் அவதூறுகளை அள்ளி விசுகிறார்கள் என்று அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பெஞ்சல் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, மாநில அவசரகால பேரிடர் மையத்தில் முதல்வர் நேரில் ஆய்வு, அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனைக் கூட்டம்,
பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் க.பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வி. செந்தில் பாலாஜி, எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வெ.கணேசன் ஆகியோரை உடனடியாக அனுப்பியது, திமுக வார் ரூமில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கியது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்க ஏற்பாடு செய்தது.
பாதிக்கப்பட்ட சென்னை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு முதல்வரே நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அனுப்பி பணிகளை முடுக்கி விட்டது என தொடர்ந்து நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது திராவிட மாடல் அரசு. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதியை அறிவித்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
ஆனால், அதிமுக உள்ளிட்ட சில எதிர்க் கட்சிகள் பேரிடரிலும் அரசியல் செய்து கொண்டிருக்கின்றன. அ.தி.மு.க ஆட்சியில் 2005 டிசம்பர் மாதத்தில் சென்னையில் ஏற்பட்ட பெருமழையின் போது நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்து, எந்தவித திட்டமிடுதலும் இல்லாமல், சென்னை அசோக் நகர் பள்ளி முன் திரண்ட பொதுமக்கள் கூட்ட நெரிசலில் மிதிபட்டு 42 பேர் உயிரிழந்ததையும், வியாசர்பாடியிலும் 6 பேர் உயிரிழந்த அவலத்தையும் மறக்க முடியுமா! 2015ம் ஆண்டு, அதிமுக ஆட்சியில், செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிடுவதில் காலம் தாழ்த்தி, எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் திறந்துவிட்டதால், சென்னை மாநகரம் மூழ்கி வெள்ளத்தில் 289 பேர் பலியானார்கள்.
திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அளித்த நிவாரண பொருட்களில் எல்லாம் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை போட்டு அதிமுக ஸ்டிக்கர்கள் ஒட்டி அடாவடித்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அத்தகைய காட்சிகளோடு, முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசின் மக்கள் நலன் நாடும் தொண்டுகளை எல்லாம் நினைவு கூர்ந்து ஒப்பிட்டு, முதல்வரை மக்கள் பாராட்டுவதை பொறுக்க முடியாமல்தான் அவதூறுகளை அள்ளி விசுகிறார்கள். மக்களின் மனங்களை வெல்லும் இயக்கும் திமுக. அதை இறுதி மூச்சு வரை செய்து கொண்டே இருக்கும் திராவிட மாடல் அரசு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post முதல்வரை மக்கள் பாராட்டுவதை பொறுக்க முடியாமல் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள்: அமைச்சர் கடும் கண்டனம் appeared first on Dinakaran.