×

போதைப்பொருட்களை விற்பனை பற்றி தகவல் தெரிவிக்கலாம்

பெரம்பலூர், டிச. 6: சட்ட விரோதமாக கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை செய்வோர் பற்றி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம். பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ மருதமுத்து கூறினார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி நேற்று பெரம்பலூர் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மருத்துவர் வனிதா, பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ மருதமுத்து, பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு புறத்தொடர்பு பணியாளர் ஜனார்த்தன், ஆகியோர் இணைந்து பெரம்பலூர் அருகேயுள்ள கீழக்கரை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களிடம் போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவைகள் குறித்து, உறுதிமொழி எடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ மருதமுத்து, குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண்கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற உயிருக்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள், அதனை அருந்தி உயிரிழப்பவர்களின் குடும்பங்கள் படும் துயரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் தங்களது பகுதி களில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்க ளின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் செயல்படும் இலவச உதவி எண் களான Women HelpDesk 112 குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098, பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417, முதியோர் உதவிஎண்கள் 14567, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் உதவி எண்களான சட்டவிரோத மது விற்பனை புகார் எண் 10581, பெண்கள் உதவி மையம் இலவச தொலை பேசி எண் 181, சைபர் கிரைம் உதவி எண்கள் 1930, ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து அதற்கான தீர்வினை வழங்க வேண்டும் என்றும் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தன் பிள்ளைகளுக்கு தொடுதல் குறித்த விழிப்புணர்வு (GOOD TOUCH BAD TOUCH) பற்றி கட்டாயம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறினர். நிகழ்ச்சியின் முடிவில் பெண் குழந்தை களை பாதுகாப்போம். பெண் குழந்தைகளை படிக்க வைப்போம். பெண் குழந்தை திருமணத்தை எதிர்ப்போம் என்று அனைவராலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

The post போதைப்பொருட்களை விற்பனை பற்றி தகவல் தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Perambalur District Crimes Against Women and Children ,SSI ,Maruthamuthu ,Perambalur District ,SP Adarsh… ,Dinakaran ,
× RELATED தரச் சான்றிதழுக்கான தகுதிகள்...