×

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தொடர வேண்டும்: மதுரை ஆதீனம் பேச்சு

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்று மதுரை ஆதீனம் பேசினார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயிலில் புதிய வெள்ளித்தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. இதை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்‌.

விழாவில் கலந்து கொண்ட மதுரை ஆதீனம் பேசியதாவது: ஆதீனங்கள் தமிழை வளர்ப்பதில் பெரும் பங்காற்றி உள்ளனர். திமுக அரசும் ஆதீனங்களுடன் இணைந்து ஏராளமான கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி உள்ளது. மேலும் ஏராளமான கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த ஆட்சி செயல்பட்டு வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆதீனங்களுடன் இணைந்து ஆன்மிக பணியாற்றி வருகிறார். இதேபோல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் மேம்பாட்டு பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். இதுபோன்ற செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தொடர வேண்டும். இதே போல் மத்தியிலும் மோடி ஆட்சி தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தொடர வேண்டும்: மதுரை ஆதீனம் பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK ,Tamil Nadu ,Madurai Atheenam ,Mayiladuthurai ,Madurai ,Atheenam ,Amrithakateswarar Temple ,Abirami Amman ,Thirukkadaiyur ,Tharangampadi ,Hindu Samaya ,Charitable Affairs ,Minister ,
× RELATED திமுக வழக்கறிஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்