சென்னை: ஐஆர்சிடிசி வெளியிட்ட அறி க்கை: இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐஆர்டிசி சுற்றுலா பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கவுரவ் சுற்றுலா ரயிலை இயக்க உள்ளது. இதில், ஒரு குளிர்சாதன பெட்டி, 10 ஸ்லீப்பர் கோச்சுகள், ஒரு பேண்ட்ரி கார், 2, பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன. ஐஆர்சிடிசியின் தென்மண்டலம்/ சென்னை சார்பில் மகா குடும்பம் 2025 என்ற பெயரில் சுற்றுலா ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
பாரத் கவுரவ் சுற்றுலா ரயிலின் சிறப்பம்சங்கள்: 3ஏசி வகுப்பு/ ஸ்லீப்பர் ரயில் பயணம், ஏசி, சாதாரண அறை, உள்ளூர்களில் பார்வையிடுவதற்கு போக்குவரத்து, தென்னிந்திய உணவு, சுற்றுலா மேலாளர் மற்றும் தனியார் பாதுகாவலர் வசதி. ரயில் வழித்தடம்: நெல்லை, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர் மற்றும் விஜயவாடா.பயணம் தொடங்கும் நாள் ஜனவரி 16ம் தேதி, முடியும் நாள் ஜனவரி 24ம் தேதி. இதற்கு ஒரு நபருக்கு தலா ரூ.28,100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்ய 9003140739 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
The post ‘மகா குடும்பம் 2025’ நெல்லை டூ அயோத்தி சுற்றுலா: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.