×

எடப்பாடி பழனிசாமியை ‘ஆண்ட்ராய்டு போபியோ’ ஆட்டிப் படைக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி

சென்னை: டார்ச்லைட் வெளிச்சத்தில் மருத்துவம் என்ற எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு ‘ஆண்ட்ராய்டு போபியோ’ அவரை ஆட்டிப் படைக்கிறது என மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவர்கள் இன்றி ஊழியர்களே தலையில் தையல் போட்டு சிகிச்சை அளித்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப்பதிவு: மானாமதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு தையல் போடும் நேரத்தில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டது. அப்போது மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர் எதிர்பாராதவிதமாக பழுதாகிவிட்டதால் இடைப்பட்ட நேரத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் தலையில் தையல் போட்டு சிகிச்சை அளித்ததை தன்னுடைய விளம்பரத்திற்காக எதிர்க்கட்சி தலைவர் அரசியல் செய்கிறார். எக்ஸ் தளத்தில் எழுத எதுவும் கிடைக்காதா? என தினமும் ஏங்கும் ‘ஆண்ட்ராய்டு போபியோ’ வந்து பழனிசாமியை ஆட்டிப் படைக்கிறது போல. எந்த சூழலிலும் செயல்பட ஜெனரேட்டர் உள்பட எல்லா முன்னேற்பாடுகளுடன்தான் அரசு மருத்துவமனைகள் திராவிட மாடல் ஆட்சியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. காலி பணியிடங்கள் ஏற்படும் போதெல்லாம் டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். வரும் ஜனவரி 5ம் தேதி கூட 2,553 டாக்டர்கள் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

The post எடப்பாடி பழனிசாமியை ‘ஆண்ட்ராய்டு போபியோ’ ஆட்டிப் படைக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Minister ,M. Subramanian ,Chennai ,Subramanian ,Android Popio ,Manamadurai, Sivagangai district ,M.Subramanian ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு பாமக ஆர்ப்பாட்டம்