×

லஸ் சர்ச் சாலையில் “இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் போக்குவரத்துத் தீவு” பெயர்ப்பலகையை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்டி, லஸ் சர்ச் சாலையில் உள்ள போக்குவரத்துத் தீவிற்கு புதிதாக பெயர் சூட்டப்பட்ட “இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் போக்குவரத்துத் தீவு” பெயர்ப்பலகையினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று திறந்து வைத்தார்.பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123, லஸ் சர்ச் சாலை, காவேரி மருத்துவமனை அருகில் உள்ள போக்குவரத்துத் தீவிற்கு (Traffic Island) “இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் போக்குவரத்துத் தீவு” என்கிற பெயர் சூட்டி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, லஸ் சர்ச் சாலை போக்குவரத்துத் தீவில் இன்று (26.12.2024) நடைபெற்ற விழாவில், புதிதாக பெயர் சூட்டப்பட்ட “இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் போக்குவரத்துத் தீவு” பெயர்ப்பலகையினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மேயர் திருமதி ஆர். பிரியா, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. த. வேலு, மதிப்பிற்குரிய துணை மேயர் திரு. மு. மகேஷ்குமார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் திரு. பூச்சி எஸ். முருகன், ஆணையாளர் திரு.ஜெ. குமரகுருபரன். இ.ஆ.ப., மண்டலக் குழுத் தலைவர் திரு. எஸ். மதன்மோகன், மாமன்ற உறுப்பினர் திருமதி மோ. சரஸ்வதி, இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் அவர்களின் மகள் திருமதி புஷ்பா கந்தசாமி மற்றும் குடும்பத்தினர். ரசிகர்கள் சங்க நிர்வாகிகள் நடிகர் திரு.ராஜேஷ். திரு.வி.பாபு, திரு.முகமது இலியாஸ், நடிகர் கலைமாமணி திரு.பூவிலங்கு மோகன், நடிகர் திரு.தசரதி. ஒளிப்பதிவாளர் திரு.விக்ரமன், தமிழ்நாடு இயக்குநர் சங்கப் பொதுச் செயலாளர்/இயக்குநர் திரு.ம.பேரரசு, பொருளாளர் திரு.சரண், தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம்/தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் திரு. மங்கை அரிராஜன், சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் திரு.சிவன் சீனிவாசன், திரையுலகப் பிரமுகர்கள்/நடிகர்கள் திரு.எஸ்.வி.சேகர், திரு.பிரமிட் நடராஜன், திரு.அழகு, திரு.டி.வி.வரதராஜன், திரு.நாகேஷ் ஆனந்த்பாபு, நடிகை காயத்ரி ரகுராம், திரைப்பட இயக்குநர்கள் திரு.வசந்த், திரு.நாகா. கலை இயக்குநர் திரு.சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post லஸ் சர்ச் சாலையில் “இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் போக்குவரத்துத் தீவு” பெயர்ப்பலகையை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு!! appeared first on Dinakaran.

Tags : Minister ,K.N. Nehru ,Luz Church Road ,Chennai ,Tamil ,Nadu ,Chief Minister ,Municipal Administration ,Mr. ,post ,
× RELATED மருத்துவ கழிவு கொண்டு வந்து...