×

பல்வேறு முறைகேடுகளை தடுத்து நிறுத்த கல்குவாரிகளில் கணினி ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; கலெக்டரிடம் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் மனு


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், கனிம வளத்துறை சார்பில் கைகளால் எழுதி வழங்கப்படும் அனுமதி சீட்டுகளினால், ஏற்படும் முறைகேடுகளை தடுக்க கணினி ரசீது வழங்க வேண்டும் என்று மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் கனிமவளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் கல் அரவை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளிலிருந்து கனரக லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் கருங்கல், சக்கை கருங்கல், ஜல்லி எம்-சாண்ட் உள்ளிட்டவைகளுக்கு கனிம வளத்துறை அதிகாரிகள் கையொப்பமிட்ட அனுமதி சீட்டை கல்குவாரி உரிமையாளர்கள் வழங்கி வருகின்றனர்.

கல்குவாரிகளிலிருந்து கொண்டு செல்லப்படும் பொருள்களுக்கு கையினால் எழுதி அனுமதி சீட்டு வழங்கப்படுவதால், பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. இதன் காரணமாக பொருட்களை எடுத்துச்செல்லும் லாரி ஓட்டுநர்களும், லாரி உரிமையாளர்களும், காவல்துறை மற்றும் வருவாய்த்துறையிடம் குற்றவாளிகளாக சிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தலைமையில் சங்க நிர்வாகிகள், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை தந்து, அனைத்து துறைகளிலும் கணினி பயன்பாடு வந்துவிட்ட பிறகு, கனிமவளத்துறையில் மட்டும் கணினி ரசீது வழங்கப்படாமல் கைகளினால் எழுதி ரசீது வழங்கப்படுவது பல்வேறு முறைகேடுகளுக்கு வழி வகுத்துகிறது.

ஆகவே, கனிமவளத்துறையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் கல்குவாரியில் இருந்து கொண்டு செல்லும் பொருட்களுக்கு கணினி ரசீதை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, மனு அளித்தனர். பின்னர், மாநில தலைவர் யுவராஜ் நிருபர்களிடம் பேசுகையில்; காஞ்சிபுரம் மாவட்ட கனிமவளத்துறை சார்பில் கல் குவாரிகளில் கணினி ரசீது அனுமதி சீட்டு வழங்குவதை செயல்படுத்தாமல் விட்டால். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கம்ப்யூட்டர்களை கொண்டு வந்து உடைக்கும், நூதன போராட்டம் நடத்துவோம்’ என்றார்.

The post பல்வேறு முறைகேடுகளை தடுத்து நிறுத்த கல்குவாரிகளில் கணினி ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; கலெக்டரிடம் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் மனு appeared first on Dinakaran.

Tags : Sand Truck Owners Association ,Kanchipuram ,Sand Truck Owners' Association ,Mineral Resources Department ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து மாற்றத்தால் வியாபாரம்...