×

பாஜ எம்எல்ஏ காந்தி, எச்.ராஜா,பொன்னார் கைது

சென்னை: கோவை சிவானந்தா காலனி பகுதியில் வங்கதேச உரிமை மீட்புக் குழு சார்பில் வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து தடையை மீறி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழக பாஜ ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, மூர்த்திலிங்கதம்பிரான் சுவாமிகள், பிரஞ்ஞானந்தா தெய்வசிகாமணி சுவாமிகள் உள்ளிட்ட மடாதிபதிகள் மற்றும் இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து எச்.ராஜா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட பாஜ எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி உள்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 310 பேர் கைதாயினர்.

The post பாஜ எம்எல்ஏ காந்தி, எச்.ராஜா,பொன்னார் கைது appeared first on Dinakaran.

Tags : BJP MLA ,Gandhi, H. Raja, Ponnar ,CHENNAI ,Sivananda Colony ,Coimbatore ,Bangladesh Rights Rescue Committee ,Hindus ,Bangladesh ,Tamil Nadu ,BJP Coordination Committee ,H. Raja ,Murthilingathambiran Swamy ,Prajnananda ,Dinakaran ,
× RELATED தேவேந்திர பட்னவிஸை மராட்டிய மாநில...