- தேசிய மாசு தடுப்பு தின ஆலை
- அரியலூர்
- பசுமைப் படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம்
- தேசிய மாசு தடுப்பு நாள்
- சிறுவளூர்
- அரசு உயர்நிலை பள்ளி
- சின்னதுரை
- தின மலர்
அரியலூர், டிச.3: அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய மாசு தடுப்பு தினத்தையொட்டி, பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மரக்கன்றுகளை நடுவது மட்டுமே மாசுக்களை குறைக்கும் எளிய வழியாகும். ஒவ்வொரு மாணவரும் பொது இடம் மற்றும் தனியார் நிலங்களில் குறைந்தது 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்.
மரக்கன்றுகளை நடுவதால் தொழிற்சாலை மாசுக்கள் பசுமை இல்ல வாயுக்கள் மூலம் புவி பாதிப்படைவது தடுக்கப்படுகிறது. மேலும் நிலத்தடி நீர் உயர்த்தப்படுகிறது. மாசுக்களை குறைப்பதன் மூலம் மனித இனமும் மற்ற உயிரினங்களும் மகிழ்ச்சியுடன் வாழும் என்றார். இந்நிகழ்ச்சிக்கு பசுமை படை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ்செல்வி, சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமரன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் தனலட்சுமி, வெங்கடேசன், அந்தோணிசாமி, ஆய்வக உதவியாளர் மணிகண்டன், அபிராமி, பாலமுருகன் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
The post தேசிய மாசு தடுப்பு தினம் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு appeared first on Dinakaran.