×

திண்டுக்கல்லில் குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

 

திண்டுக்கல், டிச. 4: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக அரசு துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்து பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தை திருமணங்கள் தடுப்பு சட்டங்கள், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டங்கள், குழந்தைகள் நலக்குழு தொடர்பான வழக்குகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், நிலுவையிலுள்ள வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்தார்.

இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெய்வம், மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்தியநாராயணன், ஜெயபிரபா, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள், இளைஞர் நீதி குழுமம் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Child Protection Advisory Meeting ,Dindigul ,Dindigul Collector ,Collector ,Poongodi ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர்...