×

தோகைமலை அருகே உள்ள சாந்திவனம் மனநல காப்பகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

தோகைமலை, டிச.3: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே புழுதேரி ஊராட்சி சீத்தப்பட்டி சாந்திவனம் மனநல காப்பகத்தில் தமிழ்நாடு ஊராட்சி மன்ற செயலாளர்கள் சங்கத்தின் தோகைமலை ஒன்றிய கிளை சார்பாக அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு அரசாணை எண் 171ன் படி ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கியதன் 6ம் ஆண்டு தினத்தை ஒட்டி நடந்த நிகழ்வுக்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் வரதராஜன் தலைமை வகித்தார். மாவட்ட ஆலோசகர் இளங்கோவன், ஒன்றிய பொருளாளர் செந்தில்குமார், ஒன்றியத் தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஊராட்சி மன்ற செயலாளர்கள் சங்கத்தின் மாநில இணை செயலாளர் பில்லூர் வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு மனநலம் பாதிக்கப்பட்டோர்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் நேசமணி, நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலியராஜா, நாகராஜ், தினேஷ்குமார், மணிவேல், முருகானந்தம், பாலமுத்து, ரவிச்சந்திரன், ரமேஷ், போதுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக சாந்திவன மனநல காப்பகத்தின் இயக்குநர் அரசப்பன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து மனநலம் பாதிக்கப்பட்டோரால் அனைவருக்கும் நினைவு பரிசு அளிக்கப்பட்டது.

The post தோகைமலை அருகே உள்ள சாந்திவனம் மனநல காப்பகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Anandanam ,Santhiwanam ,Mental Health Archive ,Dokaimalai ,Dokaimala Union Branch ,Tamil Nadu Orati Association of Secretaries of Tamil Nadu Uradachi Sithapati Santhiavanam Mental Health Archive ,Dokaimalai, Karur District ,Andanam ,
× RELATED கோவை மருதமலை முருகன் கோயிலில் நாள்...