×

அரசு பஸ் கண்டக்டர் திடீர் சாவு

கிருஷ்ணகிரி, டிச.4: கிருஷ்ணகிரி- சென்னை சாலையில் வசித்து வருபவர் சரவணன்(52). இவர், அரசு போக்குவரத்துக் கழக ஓசூர் பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 1ம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துமவனையில் சேர்த்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சரவணனின் மனைவி ரேணுகா அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு பஸ் கண்டக்டர் திடீர் சாவு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Saravanan ,Krishnagiri-Chennai road ,Government Transport Corporation ,
× RELATED கற்கள் கடத்திய லாரி பறிமுதல்