×

ரூ.3.57 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சர் நாசர் அடிக்கல்

ஆவடி: ஆவடி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பள்ளி கட்டிடம், உடற்பயிற்சிக் கூடம், அறிவியல் ஆய்வகம் என பல்வேறு வகையான திட்டங்களுக்கு நேற்று அடிக்கல் நாட்டு விழாவும், நியாயவிலைக் கடை திறப்பு விழாவும் நடைபெற்றது. புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் சா.மு.நாசர் நியாயவிலைக் கடையை திறந்து வைத்தார். மேலும் காமராஜர் நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பவர் பிளாக் தரைத்தளம் அமைக்கும் பணி, திருமுல்லைவாயில் காலனி ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி, சத்தியமூர்த்தி நகர் மேல்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி, என மொத்தம் ரூ.3.57 கோடி மதிப்பீட்டிலான 16 திட்டப் பணிகளுக்கு நேற்று அமைச்சர் சா.மு. நாசர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், ஆவடி திமுக மாநகரச் செயலாளர் சன் பிரகாஷ், பகுதிச் செயலாளர்கள் நாராயண பிரசாத், ராஜேந்திரன், பொன் விஜயன் மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .

The post ரூ.3.57 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சர் நாசர் அடிக்கல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Nassar Atikal Avadi ,Foundation Country Festival and ,Fair Shop Opening Ceremony ,Avadi ,Block ,Cha. ,M. Nassar ,Nassar Atikal ,Dinakaran ,
× RELATED பிரதமர் மீது அதிருப்தி; கனடா துணைபிரதமர் திடீர் ராஜினாமா