- அக்னிபாத்
- வெலிங்டன் ராணுவ முகாம், குன்னூர்
- குன்னூர்
- வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாம், குன்னூர்
- நீலகிரி மாவட்டம்
- குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கேரளா
- ஆந்திரப் பிரதேசம்
- கர்நாடக
- மகாராஷ்டிரா
- குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாம்
குன்னூர்: குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் 516 அக்னிபாத் வீரர்களுக்கு சத்தியப் பிரமாணம் நிகழ்ச்சி இன்று நடபெற்றது. நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறும் வீரர்கள், நாட்டின் பல இடங்களுக்கும் பணி புரிய அனுப்பப்படுகின்றனர்.
இம்முகாமில், 6 மாதங்கள் பயிற்சி பெற்ற 516 பேர், அக்னி பாத் திட்டத்தில் அக்னி வீரர்களாக பணிபுரிய சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் நடந்தது. இதில் பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசிய கொடி மீது, அக்னி பாத் வீரர்கள், சத்திய பிரமாணம் எடுத்து கொண்டனர்.
The post குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் 516 அக்னிபாத் வீரர்களுக்கு சத்திய பிரமாணம் appeared first on Dinakaran.