×

பரவலாக மழை பெய்துவருவதால் மலை ரயில் சேவை 2வது நாளாக ரத்து: தண்டவாள பராமரிப்பு பணி தீவிரம்!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவருவதால் மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. உதகை – மேட்டுப்பாளையம், உதகை – குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை ரத்து. பெஞ்ஜல் புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஊட்டி-குன்னூர் மற்றும் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே உள்ள ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, மரங்கள் விழும் அபாயம் உள்ளது.

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே நாளை (புதன்கிழமை) வரையும், ஊட்டி-குன்னூர் இடையே இன்று (செவ்வாய்க்கிழமை) வரையும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து, மலை ரயில்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ரயில் தண்டவாள பராமரிப்பு பணியை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரயில்வே ஊழியர்கள் தண்டவாள பராமரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குன்னூர் ரயில் நிலையம் முன்பு உள்ள தண்டவாளத்தில் பழைய மரக்கட்டைகளை அகற்றி புதிய கட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

The post பரவலாக மழை பெய்துவருவதால் மலை ரயில் சேவை 2வது நாளாக ரத்து: தண்டவாள பராமரிப்பு பணி தீவிரம்! appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Nilgiris district ,Utkai ,Mettupalayam ,Coonoor ,Benjal ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...