×

ராஜபாளையத்தில் தொழில் முனைவோர் கண்காட்சி

ராஜபாளையம், டிச.3: ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் தொழில் கண்காட்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா பங்கேற்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். சங்கத் தலைவர் அர்ச்சிதா வரவேற்றார்.

இதில் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், ஆடைகள், உணவு, பேக்கரி, கட்டிடக்கலை, அழகு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் சார்ந்து 18 முதல் 36 வயதிற்கு உட்பட்ட இளம் தொழில் முனைவோர் 120 பேர் பங்கேற்று கண்காட்சி நடத்தினர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் விஜய் ராஜா, சிவ கணேஷ் செய்திருந்தனர்.

The post ராஜபாளையத்தில் தொழில் முனைவோர் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Entrepreneurs Exhibition ,Rajapalayam ,Rajapaliam ,Young Entrepreneurs Association ,Rajapaliam Gandhi Art Forum ,Ramco Social Service ,Unit ,Nirmala Raja ,
× RELATED ராஜபாளையத்தில் தேமுதிகவினர் அமைதி ஊர்வலம்