அரூர், டிச.3: தர்மபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சியில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் அரூர் பகுதியில் 33 செ.மீ.மழை பெய்துள்ளது. கனமழை காரணமாக வாணியாறு அணை முழுவதும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி வாணியாற்றின் கரையோரம் உள்ள அரூர் ஆத்தோர வீதியில் வசிக்கும் பொதுமக்கள் 264 பேர் நேற்று முன்தினம் இரவு முதல் அரூர் காமாட்சியம்மன் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் பேரூராட்சி மூலம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் பெஞ்சல் புயலால், பாதிக்கப்பட்டு முகாமில் தங்க வைத்துள்ள மக்களுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று மாலை அரூர் காமாட்சியம்மன் திருமண மண்டபத்திற்கு வருகை தந்து அரிசி, பருப்பு, வேட்டி, சேலை, பெட்ஸீட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சுற்றுலாதுறை அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திவ்யதர்ஷினி, கலெக்டர் சாந்தி, எஸ்பி மகேஸ்வரன், மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, பேரூராட்சிதலைவர் இந்திராணி, துணைத்தலைவர் சூர்யாதனபால், நகர செயலாளர் முல்லைரவி, வேடம்மாள், கிருஷ்ணகுமார், சௌந்தரராசு, சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post அரூர் பேரூராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்: துணை முதல்வர் வழங்கினார் appeared first on Dinakaran.