×

பெஞ்சல் புயலில் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 100 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து நாசம்: பரிதவித்து வரும் விவசாயிகள்

செங்கல்பட்டு: பெஞ்சல் புயல் காரணமாக ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் பயிரிட்ட 2 ஆயிரம்வாழை மரங்கள் சாய்ந்து நாசமானதால் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், பாலாற்றங்கரை ஓரம் உள்ள கிராமங்களான திம்மாவரம், ஆத்தூர், தென்பாதி, வடபாதி, பாலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 300ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், பெஞ்சல் புயலினால் கடந்த 30 மற்றும் 1ம் தேதி பெய்த கனமழை மற்றும் சூறாவளி காற்றினால் வாழைக்குலையுடன் கொத்து கொத்தாக வாழை மரங்கள் சாய்ந்து சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமாகின. பாதிப்படைந்த பகுதிகளில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தோட்டக்கலை துறை அதிகாரிகள் பார்வையிட்டு சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்: காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலும் வாழைமரங்கள் மட்டுமே அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றனர். இப்பகுதி மக்களின் வாழ்வாதரமே வாழை தோட்டப்பயிர் விவசாயமான வாழை விவசாயம்தான். பெஞ்சல் புயல் தாக்கத்தினால் ஆத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வாழை பயிரிட்ட 300 ஏக்கரில் சுமார் 100ஏக்கரில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைமரங்கள் காற்றில் சாயந்து விழுந்து எங்களது வாழ்வாதாரமே முழுமையாக பாதிப்படைந்து விட்டது.

ஓரிரு நாளில் வாழைத்தாரை அறுவடை செய்து வாழைக்காய், வாழைப்பூ என மார்க்கெட்டில் விற்பனைக்கு அனுப்பக்கூடிய தருவாயில் புயலில் வாழை மரங்கள் நாசமடைந்ததால் வட்டிக்கு வாங்கி பயிர் செய்து தற்போது வட்டியும் கட்டமுடியாமல் அசலும் கட்டமுடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் பரிதவித்து வருவதாகவும். தற்போது ஆய்வு செய்து வரும் தோட்டப்பயிர் அதிகாரிகள் எங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பினை ஈடுகட்டும் வகையில் நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து கூறினார்.

The post பெஞ்சல் புயலில் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 100 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து நாசம்: பரிதவித்து வரும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Attur ,Benjal ,Chengalpattu ,Chengalpattu District Kattangolathur Union ,Lake Balatangarai ,Thimmavaram ,Athur ,Dinakaran ,
× RELATED பெஞ்சல் புயல் காரணமாக...