×

பேச மறுத்ததால் விரக்தி காதலி வீட்டில் காதலன் தற்கொலை முயற்சி

அம்பத்தூர்: காதலி பேச மறுத்ததால், அவரது வீட்டிற்கு சென்று காதலன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோயம்பேட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் குட்செட்மியா(24). இவர், சோழிங்கநல்லூரில் உள்ள தனது அண்ணன் வீட்டிங் தங்கி, சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், கோயம்பேடு பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இருவரும், கடந்த 4 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

சமீப காலமாக, இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், இளம்பெண் இவரிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோயம்பேட்டில் உள்ள காதலி வீட்டிற்கு சென்ற குட்செட்மியா, ‘‘எதற்காக என்னிடம் பேச மறுக்கிறாய். நான் என்ன தவறு செய்தேன்,’’ என காதலியுடன் கேட்டுள்ளார். அப்போது இளம்பெண், ‘உன்னை எனக்கு பிடிக்கவில்லை. இனிமேல், என்னை தொந்தரவு செய்யாதே,’ என கூறியுள்ளார்.

இதனால், மனமுடைந்த குட்செட்மியா, காதலி காலில் விழுந்து, ‘என்னை மன்னித்து விடு. இனிமேல் என்னால் எந்த பிரச்னையும் வராது. ஆனால், என்னிடம் பேசாமல் மட்டும் இருக்காதே,’ என்று கதறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண், ‘முதலில் இங்கிருந்து போ. இல்லையெனில் போலீசில் புகார் அளிப்பேன்,’ என எச்சரித்துள்ளார். இதனால், விரக்தியடைந்த குட்செட்மியா, காதலி வீட்டிற்குள் சென்று, அங்கிருந்த துப்பட்டாவை எடுத்து மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கினார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த காதலி, அலறி கூச்சலிட்டார். அதன்பேரில், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, குட்செட்மியாவை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பேச மறுத்ததால் விரக்தி காதலி வீட்டில் காதலன் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Ampathur ,Coimbatore ,Kutsetmiya ,Andhra Pradesh ,Chozinganallur ,Chennai ,
× RELATED ஒடிசாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 25...