- ஒடிசா
- Ampathur
- காவல்துறை
- அம்பத்தூர் தடை அமலாக்கப் பிரிவு
- அம்பத்தூர் ஓடி
- போலீஸ் இன்ஸ்பெக்டர்
- ரமேஷ்
- உதவி ஆய்வாளர்
- ஜெயந்தி
- அம்பத்தூர்
- கேரளா
- தின மலர்
அம்பத்தூர்: அம்பத்தூர் ஓ.டி பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில், உதவி ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் போலீசார் நேற்று அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு, பார்சலுடன் வந்த 2 வாலிபர்களை பிடித்து, சோதனை செய்த போது, அதில் கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த சுராஜ்(21), ஷாம்நாத்(20) என்பதும், ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் வழியாக கஞ்சாவை கடத்தி வந்து, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் வடமாநில வாலிபர்களுக்கு விற்க முயன்றது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post ஒடிசாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சா பறிமுதல்: கேரள வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.