- திருத்தணி
- வியாபாரிகள்
- சங்கம்
- திருத்தணி
- தமிழ்நாடு வணிகர்கள் சங்க கூட்டமைப்பு
- திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
- வணிக சங்கம்
- தின மலர்
திருத்தணி: ஜிஎஸ்டி வரிவிதிப்பை கண்டித்து திருத்தணியில் 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுமென வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருத்தணியில் வணிகர் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கனகராஜ் வரவேற்றார்.
ஒன்றிய அரசு கடை வாடகையில் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்தும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. மேலும் சொத்து வரியில் 6 சதவீதம் வரியை உயர்த்தியுள்ளனர். நகராட்சியில், வியாபார உரிம கட்டணம், தொழில் வரி உயர்த்தப்படுவதால், சாமானிய வணிகர்கள் வியாபாரம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே வாடகை கடைக்கு ஜிஎஸ்டி வரி ரத்து, வரி உயர்வு திரும்ப பெற வலியுறுத்தி திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் திருத்தணியில் வரும் 12ம் தேதி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் அனைத்து வணிகர் சங்கங்களும் பங்கேற்க வேண்டும் என்று கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு மாநில துணைத் தலைவர் சீனிவாசன், மாவட்ட இணைச் செயலாளர் சுதாகர், சக்கரவர்த்தி, பிரான்சிஸ், முருகன், கமல், கோவிந்தராஜ் உட்பட ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர்.
The post திருத்தணி பகுதியில் ஜிஎஸ்டி வரிவிதிப்பை கண்டித்து 12ம் தேதி ஆர்ப்பாட்டம்: வணிகர் சங்க கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.