- சீருடை பணியாளர்கள் தேர்வு ஆணையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- தமிழ்நாடு சீருடை தேர்வு வாரியம்
- தமிழ்நாடு காவல் துறை
சென்னை: தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு காவல் துறையில் காலியாக இருந்த 2,665 இரண்டாம்நிலை காவலர்களுக்கான பணியிடங்களை நிரப்பியது. புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 7 மாத கால அடிப்படை பயிற்சியும் மற்றும் ஒரு மாத கால நடைமுறை பயிற்சியும் அளிக்கப்படும். மொத்தம் தேர்வு செய்யப்பட்ட 2,665 காவலர்களில் 792 பெண் ஆயுதப்படை காவலர்களுக்கு திருவள்ளூர் (300), வேலூர் (200) மற்றும் விழுப்புரம் (292) மற்றும் 1861 ஆண் தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலர்களுக்கு மற்றும் பின்தங்கிய ஆயுதப்படை ஆண் காவலர்கள் 12 சேர்த்து மதுரையில் (389 பேர்), தூத்துக்குடி (512), சேலம் (422), திருச்சி (350) மற்றும் கோவை (200) பயிற்சி அளிக்கப்படும்.
அடிப்படை பயிற்சியின் போது, பயிற்சி காவலர்களுக்கு வெளிப்புற மற்றும் உட்புற நடவடிக்கைகள் சம்பந்தமான பயிற்சி அளிக்கப்படும். வெளிப்புற செயல்பாடுகளில் உடல் பயிற்சி, கவாத்து அணிவகுப்பு, துப்பாக்கி சூடு, கமாண்டோ பயிற்சி, ஜங்கிள் பயிற்சி போன்றவை அடங்கும். புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் வேலூர் மற்றும் சேலம் காவல் பயிற்சி பள்ளிகளுக்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். காவலர்களுக்கான அடிப்படை பயிற்சியை திறம்படவும், வெற்றிகரமாகவும் நடத்துவதற்கான அனைத்து ஆயத்த ஏற்பாடுகளும் தமிழகம் முழுவதும் உள்ள 8 காவல் பயிற்சி பள்ளிகளிலும் செய்யப்பட்டு பயிற்சியை தொடங்க தயார் நிலையில் உள்ளன.
The post சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு; இரண்டாம் நிலை காவலர்கள் 2,665 பேருக்கு பயிற்சி: தமிழகம் முழுவதும் நாளை தொடக்கம் appeared first on Dinakaran.