×

மாநில கல்லூரி மாணவரை அடித்துக் கொன்ற வழக்கில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு ஜாமின்

சென்னை: மாநில கல்லூரி மாணவரை அடித்துக் கொன்ற வழக்கில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 மாணவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தினமும் காலை 10 முதல் 2 வரை பணியாற்றவும், மற்ற 2 மாணவர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. திருத்தணியைச் சேர்ந்த மாணவர் சுந்தர் கடந்த 4-ம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சரமாரியாக தாக்கியதில் மாணவர் சுந்தர் உயிரிழந்தார்.

The post மாநில கல்லூரி மாணவரை அடித்துக் கொன்ற வழக்கில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு ஜாமின் appeared first on Dinakaran.

Tags : Pachaiyappan College ,Chennai ,Madras High Court ,Chennai Rajiv Gandhi Government Hospital ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு...