×

ஃபெஞ்சல் புயல் எதிரொலி: சேலம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு

சேலம்: சேலம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக உருவானது. இந்த புயலால் புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில்,

திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு

சேலம் மற்றும் ஏற்காட்டில் பெய்த கனமழை காரணமாக திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட வெள்ளத்தால் அணைமேடு பகுதியில் உள்ள சலவைக்கூடத்தில் தண்ணீர் புகுந்தது. 150 சலவை தொழிலாளர்கள் துணிகளை வைத்துள்ள கூடத்தில் தண்ணீர் புகுந்ததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் நகரின் வழியாக செல்லும் திருமணிமுத்தாறு, நாமக்கல் அருகே காவிரியில் கலக்கிறது. பாதுகாப்பு கருதி திருமணிமுத்தாறு கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்காடு மலை பகுதியில் பெய்த மழை காரணமாக டேனிஷ்பேட்டை பகுதியில் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சரபங்கா நதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் 1.70 லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் கடலூர், மஞ்சக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. கரையோரம் உள்ள மஞ்சக்குப்பம், திடீர் நகர், கே.டி.ஆர். நகர், எம்.ஜி.ஆர். நகரில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. கடலூரில் ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையை தண்ணீர் சூழ்ந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் பொன் அண்ணாமலை நகரில் வெள்ளம்

விழுப்புரம் பொன் அண்ணாமலை நகரில் இடுப்பளவுக்கு தண்ணீர் சூழ்ந்ததால் 500 குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

The post ஃபெஞ்சல் புயல் எதிரொலி: சேலம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Tags : Storm ,Fengel echo ,Salem ,Cuddalore ,Viluppuram ,Bank Sea ,Fenzal ,Puducherry ,Tiruvannamalai ,Krishnagiri ,Storm Echo ,Salem, ,Dinakaran ,
× RELATED 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்