×

மழைக்கு பின் பசுமையான சம்பா வரதராஜம்பேட்டை மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணி இறுதி நிலையை எட்டியது

வலங்கைமான். டிச.2: வலங்கைமான் வரதராஜம்பேட்டை மாரியம்மன் கோயிலில் ரூ.1 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணி இறுதி நிலையை எட்டியது. விரைவில் பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட வரதராஜம் பேட்டை தெருவில் கும்பகோணம் மன்னார்குடி சாலையில் மகாமாரியம்மன் கோயில் உள்ளது இது சக்தி ஸ்தலம் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பாடை காவடி திருவிழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம் அதே போன்று ஆவணி ஞாயிறு மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபடுவர்.

நோய் வாய் பட்ட பக்தர்கள் உள்ளிட்டோர் இரவு நேரங்களில் கோயிலில் தங்குவதாக அம்மனை வேண்டிக் கொள்வர். இவ்வாறு இரவு நேர ங்களில் தங்குவதற்குஉரிய இடமில்லாத நிலையில் அப்பகுதியில் மூடப்பட்ட வணிக நிறுவனங்களில் வளாகத்தில் படுத்து உறங்குவர். பக்தர்கள் நலம் கருதி பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்ட வேண்டும் என தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு பழுதடைந்த நிலையில் இருந்த திருமண மண்டபத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் ரூபாய் ஒரு கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் 2022- 2023ஆம் ஆண்டிற்கான திருக்கோயில் நிதி மூலம் தரைதளம் மற்றும் மேல்தளத்துடன் கூடிய முடிகாணிக்கை மண்டபம் மற்றும் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிவு பெற்று பக்தர்கள்பய ன்பாட்டிற்கு வர உள்ளது.

The post மழைக்கு பின் பசுமையான சம்பா வரதராஜம்பேட்டை மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணி இறுதி நிலையை எட்டியது appeared first on Dinakaran.

Tags : Mariamman Temple ,Samba Varadarajampet ,Valangaiman Varadarajampet Mariamman Temple ,Tiruvarur ,Mariyamman temple ,
× RELATED கோயிலில் நகை திருடியவர் கைது