தொண்டி, டிச.20: தொண்டி அருகே ஓடவயல் கிராமத்தில் கோயில் நகையை திருடியவரை தொண்டி போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர். தொண்டி அருகே உள்ள ஓடவயல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் சாமி சிலையில், தாலி உள்ளிட்ட 6 பவுன் நகையை கடந்த சில தினங்களுக்கு முன்பு டூவீலரில் வந்த இருவர் திருடி சென்றனர். இதில் ஒருவரை அன்றே விரட்டி பிடித்த நிலையில், நகையுடன் தப்பிய முக்கிய குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று தஞ்சாவூர் மாவட்டம் பெருகவால்தான் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் ஆனந்தன்(44) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து நான்கரை பவுன் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
The post கோயிலில் நகை திருடியவர் கைது appeared first on Dinakaran.