- அம்மல் கல்லூரி
- ராமநாதபுரம்
- அழகப்பா பல்கலைக்கழகம்
- செய்யுது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித் துறை
- அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி துறை குழு
- தின மலர்
ராமநாதபுரம், டிச.2: செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வித் துறை நடத்திய அழகப்பா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் ஹாக்கி போட்டி ராமநாதபுரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி துறை அணி முதல் இடம் பெற்று கோப்பையை கைப்பற்றியது. செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி இரண்டாம் இடத்தை பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கான கோப்பையை செய்யது அம்மாள் மற்றும் அறிவியல் கல்லூரி முனைவர் முதல்வர் பி.பாலகிருஷ்ணன், அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி துறை முதல்வர் முனைவர் முரளிராஜன் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் முனைவர் எம்.செல்வம், அசோக் குமார் கலந்து கொண்டனர். செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சவரியர் நன்றி கூறினார்.
The post ஹாக்கி போட்டியில் செய்யது அம்மாள் கல்லூரி 2வது இடம் appeared first on Dinakaran.