×

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்றும், நாளையும் இயங்கும்

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா இன்றும், நாளையும் இயங்கும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு, சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனைக் காண தினம்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்கா இன்றும், நாளையும் இயங்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, பூங்கா நிர்வாகம் தனது செய்தி குறிப்பில் கூறுகையில், பூங்கா பராமரிப்பு பணிக்காக செவ்வாய்க்கிழமை விடுமுறை விடுவது வழக்கம். ஆனால் புயல் காரணமாக பூங்காநேற்று மூடப்பட்டது. அதனை ஈடு செய்யும் வகையில் இன்று மற்றும் நாளை பூங்கா (திங்கள், செவ்வாய்) இயங்கும், என கூறப்பட்டுள்ளது.

The post வண்டலூர் உயிரியல் பூங்கா இன்றும், நாளையும் இயங்கும் appeared first on Dinakaran.

Tags : Vandalur Zoo ,Chennai ,Vandalur ,Arinar Anna Zoo ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில்...