×

சென்னை சென்ட்ரலுக்கு பதில் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில்கள்: தண்டவாளங்களில் மழை நீர் தேக்கம்

சென்னை: சென்னை சென்ட்ரலுக்கு பதில் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து நேற்றி எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழையும் மிக கன மழையும் நேற்று முன் தினம் முதல் பெய்து வருகிறது. இதனால், ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியது. இதன் காரணமாக நேற்று காலை, புறநகர் ரயில்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டது. மேலும், பலத்த காற்று காரணமாக சென்னை பூங்கா நகர் பகுதியில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்தது.

இதனால், கடற்கரைதாம்பரம்இருமாக்கம் இடையே மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதியற்றனர். அதே போல், கடற்கர-வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை நேற்று முற்றிலும் நிறுத்தப்பட்டது. குறிப்பாக, சென்னையில் இருந்து வெளி மாநிலத்திற்கு செல்லும் ரயில்களின் பாதை மாற்றம் செய்யப்பட்டது.

வியாசர்பாடி பாலம் அருகே கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக ரயில்கள் செல்லும் பாதை மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, வியாசர்பாடி பாலம் செல்லாமல் கடற்கரை ரயில் நிலையம் வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்றது. மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்த இயக்கப்படும் சென்னை-கொல்லம்,ஈரோடு,திருவனந்தபுரம்,பெங்களுரு மெயில்,கோவை எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

The post சென்னை சென்ட்ரலுக்கு பதில் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில்கள்: தண்டவாளங்களில் மழை நீர் தேக்கம் appeared first on Dinakaran.

Tags : Coastal Railway Station ,Chennai Central ,CHENNAI ,Beach Railway Station ,Dinakaran ,
× RELATED பொய்யான வீடியோ பதிவிட்ட பாஜக நிர்வாகி மீது வழக்கு..!!