×

பெரம்பலூரில் மாவட்ட அளவில் கேரம் மற்றும் ஜூடோ விளையாட்டுப் போட்டிகள்

 

பெரம்பலூர், நவ.30: பெரம்பலூரில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவிலான கேரம் மற்றும் ஜூடோ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக, பெரம்பலூர் அளவிலான கேரம் விளையாட்டு போட்டி நேற்று (29 ஆம் தேதி) பெரம்பலூர் தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றன.

இப்போட்டியில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய நான்கு குறுவட்டங்கள் அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள், 14 வயதிற்கு உட்பட்ட, 17 வயதிற்கு உட்பட்ட, 19 வயதிற்கு உட்பட்ட ஆகிய மூன்று பிரிவுகளில் ஒற்றையர் மற்றும் இரட்டை போட்டிகளில் பங்கு பெற்றனர். போட்டிகளை பெரம்பலூர் மாவட்ட அளவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த உடற் கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் இணைந்து நடத்தினர்.

ரோவர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி சித்தார்த்தன் தலைமையில் நடந்த போட்டிகளை பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விசுவநாதன் தொடங்கி வைத்தார். இந்தப் போட்டிக ளில் முதல்இடம் பெற்ற மாணவ, மாணவியர் மாநில அளவிலான போட்டி களில் பங்கேற்க தகுதி பெற்றனர். இதேபோல், பெரம்பலூர் மாவட்ட அளவிலான ஜூடோ விளையாட்டுப் போட்டி பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது.

இந்தப் போட்டி யானது மாணவர்களுக்கு 27 வகையான எடை பிரிவுகளில் 14 வயதிற்கு உட்பட்ட, 17 வயதிற்கு உட்பட்ட, 19 வயதிற்கு உட்பட்டபிரிவுகளுக்குள் நடத்தப்பட்டது. மாணவிக ளுக்கு 25 வகையான எடை பிரிவுகளில் வயதிற்கு உட்பட்ட, 17 வயதிற்கு உட்பட்ட, 19 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளுக்குள் நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் ஒவ்வொரு எடை பிரிவிலும் முதல் இடம் பெற்ற மாணவ, மாணவியர் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

The post பெரம்பலூரில் மாவட்ட அளவில் கேரம் மற்றும் ஜூடோ விளையாட்டுப் போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Keram ,Perambalur ,DISTRICT LEVEL CARAM ,JUDO SPORTS ,TAMIL NADU SCHOOL ,Tamil Nadu School Education Department ,Keram Sports Tournament ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்...