×

இந்தியா – சீனா ஒப்பந்தத்தால் விசா விதிமுறை தளர்த்தப்படுமா? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி

புதுடெல்லி: இந்தியா – சீனா ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான நீண்ட கால எல்லைப் பிரச்னைகள் முடிவுக்கு வந்துள்ளதா? விசா வழங்குவதில் விதிகள் தளர்த்தப்படுமா? என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மக்களவையில், ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்திடம் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரும் மத்திய சென்னை எம்.பியுமான தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விகள்:

* இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ஏற்பட்ட ஒப்பந்தத்தினால் ஏற்பட்ட தாக்கம் என்ன?

* நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்னைகள் குறித்து இந்த மாநாட்டில் தீர்வு காணப்பட்டதா? அப்படியானால் அதன் விவரங்களைத் தெரியப்படுத்தவும்.

* எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குறித்து, அவ்வப்போது தகவல்களாகவோ அல்லது வெள்ளை அறிக்கையாகவோ ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளதா?

* எல்லை ஒப்பந்தம் குறித்து சீன அரசாங்கத்திடம் இருந்து முறையான அறிக்கை வந்துள்ளதா?

* இந்தியா – சீனா எல்லைப் பிரச்னையில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, சீன அரசு பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிக்கத் தயங்குவதாக ஒன்றிய அரசு உணருகிறதா?

* எதிர்காலத்தில் தவறான புரிதல்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ, எல்லைக் கோடு விவகாரத்தில் மீண்டும் பிரச்னை ஏற்படுமாயின் அதனைச் சரிசெய்ய முறையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளனவா?

* இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் விசா வழங்குவதில் விதிகளைத் தளர்த்துவதற்கான திட்டங்கள் உள்ளதா என்றும் அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தெரியப்படுத்தவும் எனக் கேள்வி எழுப்பினர்.

The post இந்தியா – சீனா ஒப்பந்தத்தால் விசா விதிமுறை தளர்த்தப்படுமா? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி appeared first on Dinakaran.

Tags : India ,China ,Dayanidhi Maran ,Lok Sabha ,New Delhi ,Dayanithi Maran ,Union Ministry of External Affairs ,Dinakaran ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தயாநிதி...