×

பாம்பன் பால குறைபாடுகள் சரி செய்யப்படும்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் பேட்டி

சிவகங்கை: சிவகங்கை ரயில்வே ஸ்டேசன் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளது. இந்த ரயில் நிலையத்தை நேற்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார். அவரிடம் புதிய பாம்பன் பால குறைபாடுகள் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாம்பன் புதிய ரயில் பால பணிகளில் எந்த குழப்பமும் இல்லை.

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தது வழக்கமான ஒன்று தான். அவர் அனுமதி வழங்கிவிட்டார். எனவே திறப்பு விழா நடத்துவதில் எந்த தடுமாற்றமும் இல்லை. அனைத்து குறைபாடுகளும் ஒரு வாரத்தில் சரி செய்யப்பட்டு விரைவில் ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

The post பாம்பன் பால குறைபாடுகள் சரி செய்யப்படும்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Bridge ,Southern Railway ,Sivagangai ,Amrit Bharat ,General Manager ,RN Singh ,Pampan Bridge ,Pampan ,Dinakaran ,
× RELATED ஆர்-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுத்தால் 3% சலுகை: தெற்கு ரயில்வே தகவல்