×

மாவட்ட டேக்வாண்டோ போட்டி கூடங்குளம் ஹப்ரான் பள்ளி முதலிடம்

ராதாபுரம், நவ. 30: மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கூடங்குளம் ஹப்ரான் பள்ளி சாதனை படைத்தது. மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டிகளில் கூடங்குளம் ஹப்ரான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொன்டனர். இதில் டேக்வாண்டோ போட்டியில் போட்டியிட்ட சாரதி என்ற மாணவன் மாவட்ட அளவில் வெற்றி பெற்று தங்கபதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவனை பள்ளி முதல்வர் விஜயா எபனேசர், பள்ளி தாளாளர் எபனேசர் பால்ராஜ், உடற்பயிற்சி ஆசிரியர் காமராஜ் மற்றும் டேக்வாண்டோ பயிற்சியாளர் வினோத் மற்றும் ஊர் பெரியவர்கள் பாராட்டினர்.

The post மாவட்ட டேக்வாண்டோ போட்டி கூடங்குளம் ஹப்ரான் பள்ளி முதலிடம் appeared first on Dinakaran.

Tags : District Taekwondo Competition ,Kudankulam Hubran School ,Radhapura ,KOODANKULUM HUBRON SCHOOL ,Balakrishna Metric Secondary School ,North Nakankulam ,Koodankulam Habran Metric High School ,District Taekwondo Competition Kudankulam Hubran School ,Dinakaran ,
× RELATED எல்லை பாதுகாப்பு படை எஸ்ஐ...