- எல்லை பாதுகாப்பு படை
- நெல்லா
- அழகு
- சாமுக்கரங்கபுரம்
- நெல்லா மாவட்டம் ராதபுரம்
- எஸ்ஐ
- பஞ்சாப்
- சாமுக்காரெங்கபுரம்
நெல்லை: நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்தவர் அழகு (42). எல்லை பாதுகாப்பு படையில் எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பணியில் ஈடுபட்டுள்ளார். சமூகரெங்கபுரத்தில் அவரது பெற்றோர் வசித்து வருகின்றனர். கடந்த மாதம் பெற்றோரை சந்திக்கச் சென்ற அழகு மீண்டும் விடுப்பில் வரவேண்டியதுள்ளதால் தனது கைத்துப்பாக்கியும், 25 தோட்டாக்களையும் வைத்து விட்டுச் செல்வதாக கூறிச் சென்றார்.
சீக்கியர்கள் பயன்படுத்தும் கத்தியும் வைத்திருந்தார். கடந்த 5ம் தேதி அவரது பெற்றோர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றனர். மதியம் வீடு திரும்பிய போது கைத்துப்பாக்கி, 25 தோட்டாக்கள் மற்றும் கத்தி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தனர். புகாரின்படி நெல்லை மாவட்ட போலீசார் மதுரை, திருமங்கலம், சிவரக்கோட்டையை சேர்ந்த ராகவன் (23), குமார் (24), ராமேஸ்வரம்,
தங்கச்சிமடம் முத்து (30), சிவகாசி முத்து (23), திருத்தங்கல் அமாவாசை (25) ஆகிய 5 பேரை நேற்று கைது செய்து, கைத்துப்பாக்கி, கத்தியை மீட்டனர். 22 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். 3 தோட்டாக்கள் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருடர்களில் ஒருவர் மருமகன் 2வது திருமணம் செய்ததால் அவரை கொல்ல கைத்துப்பாக்கி தேவை என திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. தற்போது 3 தோட்டாக்கள் மாயமானதால் அவை என்ன ஆனது என்று போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
The post எல்லை பாதுகாப்பு படை எஸ்ஐ கைத்துப்பாக்கியை திருடிய 5 பேர் கைது: 3 தோட்டாக்கள் மாயமானதால் பரபரப்பு appeared first on Dinakaran.