×

ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மனு: அமலாக்கத்துறை பதில் தர சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் ஜாபர் சாதிக் ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட தன்னிடம் அமலாக்கத்துறை விசாரணை முடிவுற்று குற்றபத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த ஜாமீன் மனு நீதிபதி எழில் வேலவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பதில் மனுதாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு டிசம்பர் 2ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

The post ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மனு: அமலாக்கத்துறை பதில் தர சிபிஐ நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Jaber Sadiq ,CBI ,CHENNAI ,Zafar Sadiq ,Zabar Sadiq ,Jabar Sadiq ,Dinakaran ,
× RELATED வங்கி கடன் மோசடி வழக்கில் அதிமுக மாஜி...