×

நேற்று இரவு திடீரென வெளியானது அஜித்தின் விடாமுயற்சி டீசர்


சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம், ‘விடாமுயற்சி’. லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன் அறிவிப்பு எதுவுமின்றி, நேற்றிரவு 11 மணிக்கு படத்தின் டீசர் திடீரென வெளியானது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்த டீசரின் தொடக்கத்தில் அர்ஜுனின் கேங் கார் ஒன்றின் டிக்கியில் இருந்து ஒரு மனிதரை வெளியே இழுத்து போடுகிறார்கள். இதனைத் தொடர்ந்து ஹீரோ அஜித்தின் இன்ட்ரோ தொடங்கி, த்ரிஷா என கதாபாத்திரங்கள் தொடர்பான ஷாட் என அடுத்தடுத்து காட்சிகள் விரிகின்றன.

அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கக் கூடிய கார் சேஸிங், அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளன. அதே நேரம் ஹாலிவுட் த்ரில்லர் பாணியிலான காட்சியமைப்புகளும் நம்பிக்கை அளிக்கின்றன. படத்தின் கதை என்னவாக இருக்கும் என யூகிக்க முடியாதபடி டீசர் உள்ளது. அதிலும் ஹாலிவுட் படம் பார்த்ததுபோல் இதன் காட்சியமைப்புகள், ஷாட்கள் அமைந்துள்ளன. அஜித் படு ஸ்டைலிஷ் ஆன லுக்கில் இருக்கிறார். அனிருத்தின் பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது. ஓம் பிரகாஷின் கேமரா ஒரு த்ரில்லர் படத்துக்கான அத்தனை அம்சங்களையும் அடக்கியதாக உள்ளது.

The post நேற்று இரவு திடீரென வெளியானது அஜித்தின் விடாமுயற்சி டீசர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ajit Kumar ,Makhil Thirumeni ,Anirit ,Laika ,Trisha ,Arjun ,Regina ,Arao ,Azerbaijan ,
× RELATED பெண்ணை ஏமாற்றிய இருவர் கைது