×

திமுக இளைஞரணி சார்பில் துணை முதல்வர் பிறந்தநாள் விழா

கமுதி, நவ.29: கமுதி அருகே சடையனேந்தல் பகுதியில் உள்ள மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் இல்லத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் கொண்டாடப் பட்டது. மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், வடக்கு ஒன்றிய இளைஞரணி சிரஞ்சீவி தலைமையில், ஏராளனமான திமுகவினர் மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் மாணவர்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துக்கிளி, முருகன், ஒன்றிய பொருளாளர் முத்து மற்றும் ராமபாண்டி, வேப்பங்குளம் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post திமுக இளைஞரணி சார்பில் துணை முதல்வர் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,DMK ,Kamudi ,Udhayanidhi Stal ,DMK North Union Youth ,Sadayanendal ,District Secretary ,Kadarpatcha Muthuramalingam ,MLA ,Ilajanarani ,Dinakaran ,
× RELATED 2026 தேர்தலில் வெற்றி நமக்கே திமுகவுக்கு...